ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் அரச அலுவலகத்தினை முற்றுகையிட்டு பலரை சிறைபிடித்த தீவிரவாதிகளுக்கும் அதிரடி படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் அகதிகள் நலவாழ்வு இயக்குனரகத்தின் அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி வழங்குபவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலுவலகத்தினை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை துப்பாக்கிமுனையில் சிறைப்பிடித்து வைத்திருந்த நிலையில் அவர்களை மீட்பதற்காக அதிரடிப்படையினர் தாக்குதல் மேற்கொண்டநிலையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது