பாலியல் தொழிலுக்காக வளைகுடா நாடுகளுக்கு கடத்தும் நோக்கத்தில் டெல்லியில் விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட 39 நேபாளப் பெண்களை டெல்லி மகளிர் ஆணையகம் மீட்டுள்ளது. டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நேபாள நாட்டு பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையகத்துக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பின்னிரவு குறித்த விடுதியில் சேதனை மேற்கொண்ட போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 39 நேபாள நாட்டுப் பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் இவ்வாறு சுமார் 150 பெண்கள் இத்தகைய தரகர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள காவல்துறையினரின் புள்ளி விபரங்களின்படி அங்கு தற்போது மனித கடத்தல் அதிகரித்துள்ளது எனவும் 181 ஆக இருந்த கடத்தல் முறைப்பாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் 268 ஆக உயர்ந்துவிட்டதெனவும் இப்படி கடத்தப்பட்டவர்களில் 80 சதவிகிதம் இளம்பெண்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.