குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ..பகுதியில் இருந்து பத்து இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மரக்கடத்தல் நடவடிக்கை புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆவன்னா பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து 31.07.18 அன்று இரவு புதுக்குடியிருப்பு காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது குறித்த வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட மரங்கள் உழவு இயந்திரங்ககளில் ஏற்றப்பட்டபோது காவல்துறையினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையினை தடுத்துள்ளார்கள்.
குறித்த சட்டவிரோத மரக்கடத்தல் வீட்டின் உரிமையாளர் தப்பி ஓடிவிட்ட நிலையில் வீட்டின் குடும்ப பெண்ணினை கைதுசெய்துள்ளதுடன் நான்கு உழவியந்திரங்களில் ஏற்றப்பட்ட மரங்கையும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மீட்டுள்ளார்கள்
சுமார் பத்து இலட்சம் பெறுமதியான மரக்கடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த மரங்கள் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் கைதான நபரினையும் மரங்களைம் 01.08.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்