சிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1980ல் சிம்பாப்வே விடுதலை பெற்றதில் இருந்து 37 ஆண்டுகளாக அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த 93 வயது முகாபே அண்மையில் பதவிவிலகியிருந்ததனையடுத்து அங்கு முதன்முறையாக கடந்த 30ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நடைபெற்ற வன்முறைகளினால் 24 மணி நேர தாமதத்திற்கு பின்னர் பலத்த பாதுகாப்புகளுடன் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போதைய ஜனாதிபதி எமர்சன் முனங்காக்வாவின்; ஆளும் ஜானு-பி.எப். கட்சி இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், ஜானு-பி.எப். கட்சி மூன்றில் இரு பெரும்பான்மை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. இதனால் அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தையும் திருத்தும் வல்லமை, ஜானு-பி.எப். கட்சிக்கு வாய்த்துள்ளது.அதேவேளை ஆளும் ஜானு-பிஎப் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து தோதலில் முறைகேடுகள் இடம்பெற்ற தெரித்து போராட்டம் நடத்திய போராட்டக் காரர்கள் மீது ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அங்கு இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பும் பிரித்தானியாவும் கவலை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது