ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் அமைப்பினர் இராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தலிபான்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை பயன்படுத்தி ஐ.எஸ் அமைப்பினரும் அங்கு கால்பதித்துள்ளனர்.
இந்தநிலையில் ஐ.எஸ். அமைப்பினருக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுவந்தநிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அங்கு 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சரணடைந்தவர்களில் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் உள்ளடங்குவதாகவும் இதன்மூலம் ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் ஐ.எஸ் அமைப்பினரின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் கருதப்படுகின்றது