புதையல் தோண்டிய இடத்தில் காலணி குழப்பத்தில் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தென்னியன்குளம் வனப்பகுதியில் சட்டவிரோத காடழிப்பு புதையல் தோண்டும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றபோதும் இந்த விடயங்களில் அதிகாரிகள் கவனமெடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இவ்வாறு வனப்பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது இதனடிப்படையில் குறித்த கிராமத்தில் செளியா வில் என்ற இடத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கை அண்மையில் இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் பூசைகள் இடம்பெற்று கோழிகள் வெட்டப்பட்டுள்ளன இதேபோன்று குறித்த பகுதியில் ஒரு சோடி சப்பாத்தும் காணப்படுவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர் புதையலை தோண்டுவதற்காக சிறுவர்கள் யாராவது வெட்டி பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கின்றனர் இதனால் அப்பகுதியில் குழப்பநிலை காணப்படுகிறது
குறித்த பகுதியில் இந்த சப்பாத்து இருப்பதாக பொலிசாருக்கு 3 நாட்களுக்கு முன்னர் அறிவித்த போதும் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் குறித்த சப்பாத்துக்களை எடுத்து சென்றுள்ளனர்
இந்நிலையில் மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் குறிப்பாக இந்த பகுதியில் புதையல் தோண்டுகின்றனர் காடுகள் முழுக்க மரங்களை வெட்டி அளித்து தமக்கு மழை இல்லை தண்ணியில்லை இவற்றை அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் இவ்வாறே கைவிடப்பட்டுவிடும் எனவே இது தொடர்பில் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவேண்டும் என கோரியுள்ளனர்
அத்தோடு குறித்த பகுதியில் இடம்பெறும் காடளிப்பையும் நிறுத்த வேண்டுமென தெரிவிக்கின்றனர் குறித்த தோண்டப்பட்ட பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது