அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்துமாறு 17 கட்சிகள் தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் காகித பயன்பாடு குறைவடைவதுடன் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுவதாகவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்தது.
இதேவேளை மின்னணு வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருமாறு 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.