குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இந்து சமுத்திர பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் இலங்கை அபிலாஷையை நிறைவேற, சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் தமது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் ஒங் க்ஓ யேஜூ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆரம்பித்த ஒரே பரப்பு – ஒரு வழி என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அனுசரணை வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் பிரதமருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் சீனாவின் பிரதியமைச்சர் இதனை கூறியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் பல தசாப்தங்களாக இருந்து வரும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் விதம் குறித்து இந்த சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கைக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்தும் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இரண்டு கட்சிகள் இடையில் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.