எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரினை தமது நாட்டில் நடத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக, இங்கிலாந்து கால்பந்துச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் மூலமாக கால்பந்தாட்டத்தில் முக்கிய நாடாகக் காணப்படும் இங்கிலாந்து, 1966ஆம் நடத்திய ஒரேயொரு உலகக் கிண்ணத் தொடரில் மட்டுமே சம்பியன் கிணத்தினை கைப்பற்றியிருந்தது.
அதன் பின்னர், இருமுறைகள் உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முயன்றும் கிடைக்காத நிலையில் தற்போது 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.அடுத்த கால்பந்தாட்டப் பருவகாலத்திலேயே, இது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, கால்பந்தாட்ட உலக கிண்ணத்தை நடத்துவதற்கு முயலவுள்ள, ஒரேயோரு ஐரோப்பிய நாடாக, இங்கிலாந்து மாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது