தமது அலுவலக பணியாளர் ஒருவர் நாடொன்றினால் உளவு பார்க்கப்பட முற்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த தமது பணியாளருக்கு சமூகவலைத்ததளமான , வட்ஸ்அப் மூலம், சுட்டியொன்று அனுப்பப்பட்டதன் மூலம் இவ்வாறு உளவு பார்க்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த குறித்த செய்தியில் அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு முன்பாக இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள பெண் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை போராடி வருகின்ற நிலையில் இதைப் பயன்படுத்தியே, இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் எந்த நாட்டினால் இந்தமுயற்சி மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிட ப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது