மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு உல்லாச பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெஸ்லி, சுயாதீன உறுப்பினராக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்த பயணம் சம்பந்தமான தகவல்கள் வெளியிடாமையால் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள இயன் பைஸ்லி, இந்த பயணத்தின் மூலம் பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டமை உறுதியானது. இதனையடுத்து 30 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
எனினும் அவரது பெயர் டீ.யூ.பி கட்சியின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சுயாதீன உறுப்பினர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக கருத்தில்லை என பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார். குறிப்பாக அவர் அங்கம் வகிக்கும் கட்சியிடம் விசாரிக்காமல் கட்சியிலிருந்து நீக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டீ.யூ.பி கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் இயன் பைஸ்லி மீதான விசாரணை தொடர்ந்து இடம்பெறுவதாக கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு இயன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இந்த விஜயத்துக்கான முழுச் செலலையும் இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த அரசின் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட UK MP இயன் பெஸ்லி இடை நிறுத்தம்..