சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் தீர்மானத்தை மீளப் பெறுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களான வட்ஸ் அப், முகப்புத்தகம் டுவிட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அண்மையில் முடிவு செய்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு மக்களின் வட்ஸ் அப் செய்திகளை பதிவு செய்வதானது ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது என, உச்ச நீதிமன்றம், கூட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த திட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், இதுதொடர்பான நகர்வு குறித்து, மத்திய அரசால் ஆய்வு செய்யப்படும் எனவும், தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டு உள்ளார்.