சைபீரியாவில் இரு ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ரஸ்யாவினது 2 ஹெலிகொப்டர்கள் ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து ; புறப்பட்ட நிலையில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து எற்பட்டுள்ளது.
ஒரு ஹெலிhகாப்டரில் பெட்ரோல் கிணற்றில் பயன்படுத்தும் உபகரணங்கள் ஏற்றப்பட்டிருந்ததுடன் மற்றையதில் எண்ணெய் கிணற்றில் வேலை செய்யும் 15 தொழிலாளர்கள் உள்பட 18 பேர் காணப்பட்டனர். தொழிலாளர்களுடன் புறப்பட்ட ஹெலிகொப்டர் மேலே ஏற முயன்றபோது முன்னால் சென்ற ஹெலிகொப்டரில் ஏற்றப்பட்டு வெளியே நீட்டிகொண்டிருந்த இயந்திரத்தின் ஒருபகுதின் மீது மோதி கீழே விழுந்ததில் தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணித்த 18 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது