நாசம் அறுப்பான்…..
இப்போ இனவாதிகள் தமிழர்களுக்கு எதிராக செய்யிறதை, நம்ம ஆக்களே செய்வதனால் அவங்களுக்கு வேலை குறைஞ்சிட்டு எண்டு கவலைப் படுறாங்கள்… சொந்தச் செலவில் சூனியம் வைக்கிறது, நாமே நம்ம தலையில் மண்ணை அள்ளிப் போடுறது, வீட்டு கிருத்தியங்கள் செய்யிறது எண்டு கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறாங்கள்.. முள்ளிவாய்க்காலுக்கு பிறகு என்னவெல்லாம் நடக்குது? நல்லதுகளும் நடக்குதுதான்.. ஒரு சில நல்லது நடந்தால் அதுக்கு டபிளா அநியாயங்கள் எல்லோ அதிகமா நடக்குது…
ஞாபகம் இருக்கே உங்களுக்கு முந்தி நடந்த கோட்டு கேசுகள் பற்றி.. புலியலின்ட காலத்தில சமாதான பேச்சு நடக்கேக்க சிரான் அமைப்பு எண்டு ஒன்டை கொண்டர வெளிக்கிட்டவை. அதுக்கு ஜேவிப்பிகாரர் விடமாட்டம் எண்டு கோட்டுக்கு போய் வெண்டுட்டாங்கள்.. பிறகு வடக்கையும் கிழக்கையும் இணைந்திருக்க விடமாட்டம் எண்டு சுப்பிறீம் கோட்டுல வழக்கு போட்டவங்களும் உந்த ஜேவிபிகாரர் தான்.. அதிலயும் பிரிஞ்சுதான் இருக்க வெண்டும் எண்டு சரத் என் சில்வா தீத்து விட்டுட்டார்… இனி அவங்கள் கோடு கச்சேரி எண்டு போகத் தேவையில்லை.. எங்கடயலே அந்த வேலையை செய்ய வெளிக்கிட்டுதுகள்…
இப்ப பாருங்கோ, ஒருவர் தங்களுக்கு எதிரான கட்சியில் இருக்கிறார், எதிராக அரசியல் செய்யிறார். தலையிடி தருகிறார் எண்டுறதிற்காக, எனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுணப்பிழை ஆக வேண்டும் என்டெல்லே கங்கணம் கட்டி நிக்கிறாங்கள். விஸவலிங்கத்தாற்ற பெடி உவர் லோயர் மணிவண்ணனை எல்லே, மாநகர சபை பக்கம் வரக் கூடாது எண்டு, இடைக்கால தடை ஒன்றை கொழும்பில வாங்கியிருக்காங்கள்….
அவர் ஒரு இளம் அரசியல்வாதி. சமூகத்தில கொஞ்சம் அக்கறை கொண்டவர். தமிழருக்கோ, அவையின்ட கோரிக்கைகளுக்கோ, அல்லது அரசியல் தீர்வுக்கோ எதிரானவர் இல்லைத்தானே. ஆக குமாரின்ட பெடி கஜன்ற வலது கை. அவற்ற கட்சியில முக்கியமான ஆள். ஒரு நல்ல எதிர்கட்சி தமிழருக்கு தேவை தானே. இல்லாட்டி ஏகபோகம் எண்டு, கேட்க ஆளில்லாம, என்ன கூத்தெல்லாம் ஆடுவாங்கள். அப்பிடி என்டால் மாற்று அரசியல் பேசுறார் என்டிறதிற்காக அவற்றை காலை உடைப்பது அசிங்கமெல்லே…
உப்பிடித்தான் முதலமைச்சரிட்ட இருந்த அமைச்சர்களை நியமிக்கும் – நீக்கும் அதிகாரத்தை கொஞ்ச நாளைக்கு முதல் கொழும்பில போய் புடுங்கிப் போட்டாங்கள். இப்ப விக்கியர் மட்டும் இல்லை மற்ற எட்டு பேருன்ட கையையும் எங்கட சட்டம்பி ஒருவர் கட்டிப் போட்டார்.
எனக்கு இப்ப வயித்தை கலக்குது. சிலவேளை தப்பித் தவறி ரணிலோ – மைத்திரியோ – மகிந்தவோ மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் தரப்போறம் எண்டு சொன்னால், விக்கிட்ட குடுத்து என்ன பிரயோசனம் நீங்களே வைச்சிருங்கோ, எங்களுக்கு வேண்டாம் எண்டு கொழும்புக் கோட்டில வழக்கு போட்டு விடுவாங்களோ எண்டு பயமாய் இருக்குது…
1 comment
மணிவண்ணன் யாழ்நகர மக்களை அதிமோட்டு பிறப்புக்களாக கணித்து சுத்துமாத்துவிட்டு பொய்யாக மக்கள்முன் நின்றி தேர்தலில் வென்றார். மணிவண்ணன் ஊழல் கரங்கள் என்று தேர்தலுக்கு முன் நிரூபித்தபின்பும் மக்கள் ஒரு சந்தர்பம் கொடுத்து பார்த்தனர். ஆனால் ஊழல் மணிவண்ணன் சுத்துமாத்து மணிவண்ணனானதும் யாரும் நடவடிக்கை எடுக்கலாம்.