வெனிசுலா ஜனாதிபதி நிகலோஸ் மடுரோ மீது ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலில் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மடுரோவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 7 பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திறந்த வெளியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் ஜனாதிபதி மடுரோ உரையாற்றிக் கொண்டிருந்த போது இவ்வாறு ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாக்குதல் முயற்சிக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த மே மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மீண்டும் மடுரோ தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது