159
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் முன்னோட்டத்திற்காக இளைய இமையமைப்பாளர் அனிருத் தனது பாடல் வெளியீட்டை பிற்போட்டுள்ளார். பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சமந்தா நாயகியாகவும் நடிக்கின்றார். அத்துடன் சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒகஸ்ட் 3ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அன்று இரவு 8 மணியளவில் ‘சீமராஜா’ முன்னோட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இதேவேளை, ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பரப் பாடல் அன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. எனினும் ‘சீமராஜா’ டீசர் வெளியாவதால் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என் இனிய நண்பன் சீமராஜாவின் நாள். அதனால், ‘திட்டம் போடத் தெரியல’ பாடல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்தார்.
இதற்கு “உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயன்.அனிருத்தின் பாடல் நேற்று இரவு தான் வெளியிடப்பட்டது. தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Spread the love