கைதடி இணுங்கித் தோட்டம் கந்தசுவாமி கோவிலின் கும்பாபிஷேக மலராகிய முத்துக்குமரன் என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று 05.08.2018 பிற்பகல் ஆலயத்தில் இடம்பெற்றது.
முத்துக்குமரன் நூலின் மலராசிரியர் சி.மதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை ஆலய செயலாளர் சி.றஜீத், தொடக்கவுரையை ஆலயத் தலைவர் சி.சிவானந்தன், ஆசியுரைகளை வண. யோ. குருசாமிக் குருக்கள், வண. நா. பாலஸ்கந்தரூபக் குருக்கள் ஆகியோர் ஆற்றினர்.
.
நிகழ்வில் வாழ்த்துரைகளை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகன், மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் அ.லோகநாதன், சட்டத்தரணியும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய நா.சத்தியநாதன் ஆகியோர் ஆற்றினர். நூலின் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக கணக்கீட்டுத் துறைத் தலைவர் பேராசிரியர் சி.நிமலதாசன் ஆற்றினார். மதிப்பீட்டுரையை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார். கோவில் வரலாற்றில் முதன்முதலாக வெளியீடு செய்யப்பட்ட நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.