சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீளப்பெறப்பட்டுள்ளது….
இந்தோனேசியாவில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் மீளப்பெறப்பட்டுள்ளது. சுமத்ராவை அண்மித்து பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்த நிலையில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் மீறப்பெறப்பட்டது. கடந்த வாரம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 17 பேர் உயிரிழந்திருந்தனர் என்பாது குறிப்பிடத்தக்கது.