அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது தனது மகன் ரஸ்யாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து ஹிலாரிக்கு எதிரான தகவல்களை பெற்றமையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பானது சட்டப்பூர்வமானதுதான் எனவும் தான் பகிர்ந்த ஒரு ருவிட்டர் பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றமையில் ரஸ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தும் நோக்கில் அவருக்கு எதிரான தகவல்களை பெறுவதற்காக ரஸ்யாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரை ட்ரம்பின் மூத்த மகன், சந்தித்ததாக நியுN10யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை முன்னர் இதனை ட்ரமடபும் அவரது மகனும் மறுத்து வந்த நிலையில் ட்ரம்ப் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.