வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச் சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையானது சிவஞான முதலியார் பரம்பரையில் கந்தையா தர்மகுலசிங்கம் என்பவரின் இல்லத்துக்குச் சென்று ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியர் கையளித்தார். ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
படங்கள்: ஐ.சிவசாந்தன்