புலஸ்தீனத்தின் காஸாமுனையில் நேற்றையதினம் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டு வீச்சில் ஹமாஸ் இயக்கத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் இருந்து வரும் நிலையில் ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது.
பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காஸா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே நோக்கமாக கொண்ட ஹமாஸ் இயக்கத்தினருக்கு பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில், காஸாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது