சீனாவின் 16 பில்லியன் டொலர் ( இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) மதிப்பிலான 279 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது.சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது சீனாவும் பரஸ்பரம் கூடுதல் வரி விதித்து வருகின்றன.
அந்த வகையில் சீனாவின் 34 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ர 2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த மாதம் 6-ந் திகதி கூடுதல் வரி விதித்தது. அதே அளவுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்தது.
இந்த நிலையில் சீனாவின் 16 பில்லியன் டொலர் மதிப்பிலான 279 பொருட்கள் மீது 25 சதவீத அளவிலான இந்த கூடுதல் வரி விதிப்பு, எதிர் வரும் 23-ந் திகதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.