(நன்றி – அததெரண – கேலிச்சித்திரம்..)
அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெற்கு மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்களில் எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் கூறினார்.
அவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் 16 பேரை பிரதிநிதித்துவம் செய்யும் மேலும் உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் சான் விஜேயலால் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.