Home இலங்கை சட்ட விரோதமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சாத்திரம் சொல்பவர்கள் ஐவர் கைது…

சட்ட விரோதமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சாத்திரம் சொல்பவர்கள் ஐவர் கைது…

by admin


இந்தியாவில் இருந்து சென்று, சட்ட விரோதமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த, 5 சாத்திரம் சொல்பவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (09.08.18) கைதுசெய்துள்ளனர்.

யாழ். நகரில் உள்ள பிரபல தங்குமிட விடுதியில் தங்கியிருந்த இவர்கள் 5 பேரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சேர்ந்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த இவர்கள் ஐந்து பேரும், விசா காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச் சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More