குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்பாட்டை நிறுத்த கோரி 09.08.18 இன்று எட்டாவது நாளாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள் அவர்களின் போராட்டத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோர கிரமிய சங்கங்களை சேர்ந்தவர்கள் தொடரான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் கடந்த 02.08.18 அன்று பாரிய போராட்டம் மேற்கொண்டு முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்ட மீனவர்கள் திணைக்களத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
அதன் பின்னர் கடற்தொழில் நீரியல்வளத்திணைகள்ளத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 09.08.18 அன்று புதிய அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணிக்கு சென்றுள்ள இவர்களில் ஒரு தமிழ் அதிகாரி உள்ளிட்ட இரண்டு பெரும்பான்மையின அதிகாரிகள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
இவர்களில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஏ.டி எனப்படும் கடற்தொழில்நீரியல் வளத்திணைக்கள உதவி அதிகாரி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மீனுவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்கள்.
எதிர்வரும் 12 ஆம் திகதி மீன்பிடி அமைச்சர் அவர்களுடனான சந்திப்பின் பின்னர் மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
இந்த சந்திப்பின் போது வடமாகணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இமீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளார்கள்.