183
தென்ஆப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற T20 போட்டியில் 12 வயது சிறுவன் 62 பந்தில் 202 ஓட்டங்களை பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று T20 போட்டியில் பிரைம்ரோஸ் ஹப் அணிக்காக துடுப்பெடுத்தாடிய 12 வயது சிறுவன் கீரன் பொவர்ஸ் 62 பந்தில் 202 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் T20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை கீரன் பொவர்ஸ் பெற்றுள்ளார்.
Spread the love