குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என காவற்துறையினர் தெரிவிப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண காவற்துறை அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
வட மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை அதிபர் றொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி காவற்துறை அதிபர் பாலித பெர்னாண்டோ உள்ளிட்ட காவற்துறை அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும், இல்லாத விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு அரசியல் பின்னணியே காரணம் என காவற்துறை நம்புவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஆவா மற்றும் தனுரொக்ஸ் ஆகிய இரு வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான வன்முறைகளே யாழில் பாரிய வாள்வெட்டு சம்பவங்கள் எனவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், கலந்துரையாடலின் போது காவற்துறை தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாமல் இருக்க கையாள்கிற அரசியல் தந்திரமே இந்த ஆவா.. இது பற்றி உங்கள் கருத்து என்ன?