இலங்கை பிரதான செய்திகள்

கொக்கிளாய் கனிய மணல் அகழ்வு தொடர்பில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன!

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கொக்கிளாய் கனிய மணல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன்போது சுற்றுச் சூழலுக்கு பதிப்பு ஏற்ப்பட கூடாது, வேலைவாய்ப்பு வழங்கும்போது மாகாண விகிதாசார அடிப்படையில் வழங்க வேண்டும், வருமானம் தனிய திறைசேரிக்கு மட்டும் செல்லாது மாகாணத்துக்கு ஒருபகுதி வருமானம் வழங்க வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் கனிய மணல் அகழ்வது தொடர்பில் பல இடங்களிலும் பிரஸ்தாபிக்கப்பட்டு இறுதியாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு முன்னதாக விசேடமாக முதலமைச்சர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மாவட்ட அரச அதிபர் மற்றும் அரசியல் வாதிகள் அதிகாரிகள் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது இதன்போது இந்தவிடயம் தொடர்பில் ஆராய குழு ஒன்று அமைப்பதாக தீர்மானிக்கப்பட்டு அமைக்கப்பட்ட குழு இன்று கூடி இந்த விடயங்களை ஆராய்ந்தது

இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் இலங்கை கணியமணல் லிமிற்றட் நிறுவன தலைவர் திருமதி இந்திக்க ரணதுங்க மற்றும் பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வடமாகாண விவசாய மீன்பிடி சுற்றுச்சூழல் அமைச்சர் க சிவநேசன் முன்னாள் வடமாகாண விவசாய மீன்பிடி சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பொ ஜங்கரநேசன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர்

கொக்கிளாய் உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டு இந்த கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்ந்தனர்

இதன்போது தீர்மானமாக சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தவேண்டும் என பலராலும் கோரப்பட்டது இதற்க்கு இந்த திட்டத்தை ஆய்வு செய்யும் அறிக்கை மேலதிகமாக தங்களால் தரப்படுகின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக கண்காணிக்க பேராசிரியர்கள் ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அது சரியானது என உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதனைவிட இந்த செயற்றிட்டம் முழுவதும் இந்த பணியினை ஒரு குழு அமைத்து அது கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது

அடுத்ததாக இதனுடைய வேலைவாய்ப்புக்கள் மாகாண விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டது இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் இப்போது இருக்கின்ற திருகோணமலை புல்மோட்டை தொழிற்சாலை ஊழியர் விபரத்தை கோரினார் இதன்போது 20 தமிழர்கள் மற்றும் 248 சிங்களவர்கள் 290 முஸ்லிம்கள் வேலை செய்வதாக தெரிவித்தனர் இதன் பிறகு இவ்வாறு எமது மாவட்டத்தில் நடக்க கூடாது என கோரப்பட்டது

இதனை விட வருமானம் மாகாண சபைக்கும் பகிரந்தளிக்க வேண்டும் எனவும் எமது பிரதேச மக்களுக்கு பயனுள்ளவகையிலும் சுற்றுசூழல் பாதிப்பு அற்ற வகையிலும் நடக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து சுற்று சூழல் தொடர்பான அறிக்கையின் பின்னர் இது தொடர்பாக கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.