குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பு கவனயீர்ப்பு பேரணி ஒன்று முல்லைத்தீவு நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. உலக தரிசன நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணியில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
பெண்களின் பொதுவாழ்வில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உடலியல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக பால்நிலை அடிப்படையாக வைத்து இழைக்கப்படுகின்ற அநீதிகள் தொந்தரவுகள் என்பனவற்றுடன் சுயகௌரவம்,வாழ்க்கை சுதந்திரம் என்பவற்றுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு இராஜப்பர் ஆலயத்திற்கு முன்னாள் ஆரம்பமான கவனீர்ப்பு பேரணி பிரதேச சபை விளையாட்டு மைதானத்தை சென்றடைந்துள்ளது.
உலக தரிசன நிறுவனத்தில் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி செலீனா பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பு தொடர்பன கலை நிழ்வுகளாக கற்சிலை மடு சிறுவர்கழக மாணவர்களின் நடனம், சிறுவர் கழக மாணவ மாணவிகளின் வீதிநாடகம், என்பன இடம்பெற்று பெண்களின் பாதுகாப்ப தொடர்பில் பா.லோகேஸ்வரி அவர்களும் பெண்களின் பாதுகாப்பில் ஆண்களின் பங்களிப்பு தொடர்பில் இமானுவேல் டொமினிக்யோசம் அவர்களுகம் கருத்துரைகள நிகழத்தியுள்ளார்கள்