தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா நடிகையர் திலகம் படத்தில் நடித்து பெரும் கவனத்திற்கு உள்ளார். தற்போது ஒரு கொரிய படத்தின் தழுவலாக உருவாகும் திரைப்படத்தில் 80 வயது பாட்டியாக சமந்தா நடிக்கவுள்ளார்.
சமந்தா திருமணத்துக்கு பின்பனரும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டில் முதல் பாதியில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை முதலிய திரைப்படங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
அத்துடன் இவர் நடித்துள்ள சீமராஜா, யு டர்ன் முதலிய இரு திரைப்படங்களும் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படங்களின் பின்னர் விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும், கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்துள்ளார்.
அடுத்த கட்டமாக, கொரிய படத்தின் தழுவலாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்த படத்தில் சமந்தா 80 வயது பாட்டியாக நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.