புதுச்சேரி மாநிலத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுத்தாளர்கள் மாநாட்டை இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
புதுச்சேரி மாநில எழுத்தாளர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் முகமாக தி.பாண்டி லிட் பெஸ்ட் என்ற தலைப்பில் 3 நாட்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது.. இந்த மாநாடு 17ஆம் திகதி மாலை புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்திய மத்திய அமைச்சர் பங்கு கொண்டு ஆரம்பித்து வைக்கும் இந்த மாநாட்டில் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் கிரண்பேடி, முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 80இற்க்கும் மேற்பட்ட அறிவியல், வரலாறு, கலை, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு நூலாசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். இதில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 24 எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
அத்துடன் எழுத்தாளர்களான அமிஷ்திரிபாதி, கிட்டுரெட்டி, மைக்கேல் டேனியோ, பஞ்சாங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். அத்துடன் 35 புத்தகங்களும் வெளியாகின்றன. நாளொன்றில் 12 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.