மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைக்கும்!
இந்திய அரசின்நிதி உதவியில் மலையகத்தில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்திபுரம் வீட்டுத்திட்டம் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்வாகிகப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்தில் 404 தனி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பூண்டுலோயா டசின்னன் தோட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
அத்துடன் இலங்கைக்கான இந்தியத் தூதரர் சிங் சந்து, காணி மற்றும் நாடாளுமன்ற சீரமைப்பு அமைச்சர் கஜந்த கருணாநிதிலக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 89.5 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் உலக வங்கி திட்டத்தின் மூலம் நகரத் திட்டமிடல் அமைச்சினால் குடிநீர் வசதிகளும் இவ் வீட்டுத்திட்டத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகழ்வில் காணொளி வாயிலாக கலந்து கொண்டார். இதன்போது உரையாபற்றிய இந்தியப் பிரதமர், 12 பில்லியன் ரூபா செலவில் மேலும் 10ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியா திட்மிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் மலையக மக்களுக்கு இந்தியா வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் இந்தியப் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.