அரசாங்கம் முகம் கொடுத்துள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் மக்கள் தேசிய அரசாங்கம் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஊழல்களை இல்லதொழித்து நீதியான ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே மக்கள் தேசிய அரசாங்கத்திற்கு தனது விருப்பினை வழங்கியிருந்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இன்று தோல்வியடைந்துள்ளது.
அவன்காட் பிரச்சினையில் இருந்து மத்திய வங்கி பிணைமுறி மோசடி வரையில் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு பாதகமாகவே அமைந்திருந்தது. ஆகவே அரசாங்கம் முகம் கொடுத்துள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் மக்கள் தேசிய அரசாங்கம் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.