ஏமனில் பேருந்து மீது கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. ஏமனின் சடா நகரின் மீது சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய பல்வேறு தாக்குதல்களில் பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டுமே இவ்வாறு 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நேற்றையதினம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.