தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாவினை அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கையாடல் செய்துள்ளதாக எம்.எல்.சர்மா என்ற சட்டத்தரணி உச்சநீதிமன்றில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களில், எஸ்.சி., எஸ்.டி. சமூக மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாவினை அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கையாடல் செய்துள்ளனர் என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரையிலான கணக்குகளை தணிக்கை செய்த இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார் எனவும் , இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவசர மனுவாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்குமாறு நேற்றையதினம் இவர் வலியுறுத்தியதனையடுத்து அடுத்த வாரம் இம்மனுவை விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது