Home இலங்கை “பிள்ளையானை குறை சொன்னால் கெட்ட கோபம் வரும்”

“பிள்ளையானை குறை சொன்னால் கெட்ட கோபம் வரும்”

by admin


கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையான்) மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை குறை கூற மட்டக்களப்பில் எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 7 வது சபை அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த போதே அவர் அண்மைக்காலமாக தமது கட்சியைப் பற்றியும் கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியைப் பற்றியும் சில தரப்பினர் விமர்சித்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.தமது மாநகரத்தைப் பொறுத்த வரையில் முதல் முதல்வராக இருந்த சொல்லின் செல்வன் இராஜதுரைக்குப் பின்னர் தமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் முயற்சியினாலேயே அதிக அபிவிருத்தியை இந்த மாநகரம் கண்டுள்ளது.அதன் காரணமாகவே தமது தலைவரை இந்த மாவட்டத்தின் மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர். அதன் வெளிப்பாடே கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துவமாக நின்று போட்டியிட்ட தமது கட்சிக்கு மக்கள் 43000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி மாவட்டத்தில் 36 ஆசனங்களை பெற்றுத் தந்தனர்.

தமது கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது தற்போது நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் அரசியலில் இணைந்தவர்கள் தமது கட்சித் தலைவரை விமர்சிப்பது நகைப்பிற்குரிய விடமாகும்.முடியுமாக இருந்தால் அவரை விமர்சிப்பவர்கள் இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கும், மக்களின் தேவைகள் எவ்வளவோ இருக்கிறது அவற்றினை நிவர்த்தி செய்து விட்டு விமர்சனங்களை முன்வைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More