192
லிபியாவில் ஒரே சமயத்தில் 45 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு அந்நாட்டின் தலைநகர் திரிபோலியில நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்களை சுட்டுக்கொன்ற வழக்கு தொடர்பில் ஆயுதக் குழுக்களை சேர்ந்த 45 பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் கேர்னல் மும்மார் கடாபி ஆட்சியின் பின்னர் அங்கு ஒரே சமயத்தில் அதிகமானவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love