மருந்து கம்பெனி நடத்தி 5 ஆயிரம் கோடி ரூபா வங்கி மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபரான நிதின் என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர வங்கியில் 5 ஆயிரம் கோடி கடன் பெற்ற இவர் அதனை மீளச் செலுத்தாமல் தலைமறைவாக வாழ்ந்த நிலையில் அமுலாக்க பிரிவு வழக்குத் தொடர்ந்திருந்தது.
அத்துடன் ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் உட்பட சிலரைக் கைது செய்ததுடன் மருந்து கம்பெனியின் 4 ஆயிரத்து 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் முடக்கியிருந்தது.மேலும் தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் துபாயில் தங்கியிருப்பது தெரியவந்துள்ள நிலையில் இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமுலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது