கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.
தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், எதிர்பாராத கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும் கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.