வடக்கில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.
முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், பெரிய மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருப்பது போன்று வட மாகாணத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் இரண்டொரு ஆயுதங்கள் கண்டெடுக்கப்படலாம், ஆனால் அது யுத்தத்தின் மறு ஆரம்பமல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று வடக்கில் இருக்கின்ற அனைத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிங்கள காவற்துறை அதிகாரிகள். பாராளுமன்றத்திலும் சரி மாகாண சபையிலும் சரி அனைத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிங்கள காவற்துறை அதிகாரிகளே. எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தமிழ் காவற்துறை அதிகாரிகள் இல்லை என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்தார்.