முல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் துணுக்காய் வீதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் நடத்திவந்த சிகை அலங்கார நிலையம் மீது கடந்த 12.08.18 அன்று இரவு கடையினை உடைத்து கடைக்குள் புகுந்த விசமிகள் கடையில் உள்ள தொழில் உபகரணபொருட்களை அடித்து நொருக்கியுள்ளார்கள்.
போரின் போது பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்த வல்லிபுரம் மதிவாணன் என்பவர் நீண்டகாலமாக குறித்த பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றினை நடத்திவந்துள்ளார் இன்னிலையில் விசமிகளால் இவரது தொழில் நிலையம் உடைக்கப்பட்டு தொழில் உபகரணங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் 13.08.18 அன்று கடையின் உரிமையாளரால் மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரின் முறைப்பாட்டினை தொடர்ந்து பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.