பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் 1000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அண்மைக்காலதாக ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள்;, கல்லூரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இறுதி கடந்த புதன்கிழமை காபூலில் உள்ள தனியார் கல்வி மையம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 67 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.
இந்த நிலையில் அங்கு நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.