புதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தளவிலான வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு வழங்கும் வரையில் வேலை நிறுத்தம் தொடரும் என அந்த சங்கத்தின் அமைப்பாளர் குமார ரத்ன கூறினார். நாட்டின் வீதிக் கட்டமைப்பை நவீன மயப்படுத்தி அபராத விதிப்பு பழைய முறைக்கு இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
அதேவேளை பேருந்து பணியாளர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்திற்கு தமது சங்கமும் ஆதரவு வழங்குவதில்லை என்று அனைத்து மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் பேருந்து பணியாளர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தேசிய முச்சக்கர வண்டிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.