182
ஐ.நா. பாதுகாப்பு பேரவை விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய , சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் விதிமுறைகளை மீறி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்தமையினால் அந்நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு பேரவை கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
எனினும் இந்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியாவுடன் ரஸ்ய நிறுவனமும், சீன நிறுவனங்களும் வர்த்தக உறவு கொண்டிருந்தமை தெரிய வந்துள்ளதனையடுத்து அமெரிக்கா குறித்த நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
Spread the love