நோர்வேயின் மீன்வளத்துறை அமைச்சரும் அந்நாட்டின் சிரேஸ் தலைவர்களில் ஒருவருமான பெர் சாண்ட்பெர்க் (Per Sandberg) பதவிவிலகியுள்ளார். ஈரானின் முன்னாள் மொடல் அழகியுடன் சுற்றுலா சென்றதனால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவே அவர் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர் சாண்ட்பெர்க் அண்மையில ஈரானின் முன்னாள் மொடல் அழகியாக இருந்தவரும், தற்போது மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவருமான பஹாரே லெட்னெஸ் (Bahareh Letnes) என்பவருடன், ரகசியமாக சுற்றுலா சென்றமை குறித்து பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும் எழுந்திருந்தன. இந்நிலையில், இந்த சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் பதவிவிலகியுள்ளார்.
பெர் சாண்ட்பெர்க்கின் பதவிவிலகலானது நல்லதொரு முடிவுதான் என அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg) தெரிவித்துள்ளார்.