கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மழையின் பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் 100 வருடங்களில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை ஆயிரத்து 500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.