ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் ராணுவத்தின் நடவடிக்கையை இன அழிப்பு என குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது.
மியன்மாரின் ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ராணுவத்தினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
மியன்மாரின் இந்த செயல்பாட்டுக்கு ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்ததோடு, ரோஹிங்கியாக்கள் மீண்டும் கன்னியத்துடன் வாழ மியன்மார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய ஒடுக்குமுறைiயை இன அழிப்பு எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்ட மியான்மர் ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் மீது தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.