Home இலங்கை பாலியல் குற்றச்சாட்டு – தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்…

பாலியல் குற்றச்சாட்டு – தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்…

by admin

தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி கல்வி நிலையத்திற்கு கல்விகற்க செல்கின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சியை மேற்கொண்டார் என தர்மபுரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று (17.08.2018) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் வழக்கை விசாரித்த பதில் நீதவான் சிவபாலன் எதிர்வரும் 30 .08 .2018 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்

குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்விகற்று வருகின்ற நிலையில் அங்கு கல்விகற்க செல்கின்ற மாணவிகளுக்கு,பாலியல் தொந்தரவு மற்றும் துஸ்பிரயோக முயற்சிகள் பலமுறை இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலார் கண்டாவளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் முயற்சியில் தர்மபுரம் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே கல்வி நிலைய நிர்வாகிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More