ஒரு தாயாகவும், அதே சமயம் டென்னிஸ் வீராங்கனையாகவும் சமாளிக்க முடியாமல் பலமுறை மனமுடைந்து இருப்பதாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், தன்னால் இதை கடக்க முடியுமென்றால், உங்களாலும் முடியும் என குழந்தைகளையும், வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து வரும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசி உள்ளார்.
கடந்த வருடம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த அவர் அதன் பின் சில மாதங்கள் கழித்து டென்னிஸ் களத்திற்கு திரும்பியிருந்த போதிலும் அவர் இதுவரை பட்டங்கள் எதுவும் வெல்லவில்லை.இந்த ஆண்டின் விம்பிள்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியடைந்திருந்தார்.
அத்துடன் சிலிகான் வேலி கிளாசிக் தொடரில், தன் டென்னிஸ் வாழ்வின் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த அவர் சின்சினாட்டி மாஸN;டர்ஸ் தொடரில் இரண்டாவது சுற்றோடு வெளியேறியிருந்தார்.தனது தொடர் தோல்விகளுக்கு, மனதளவில் ஒரு தாயாகவும், டென்னிஸ் வீராங்கனையாகவும் ஒரு சமநிலையை எட்ட முடியாததே காரணம் என தெரிவித்துள்ள செரீனா தான் இன்னும் தனக்காகவும், மகளுக்காகவும் வாழும் ஒரு சமநிலையை எட்ட கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதைக் கற்றுக்கொண்டு இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் தங்களை இரண்டாவது, மூன்றாவது இடத்தில் வைத்துக் கொள்வதை முன்பு தான் புரிந்து கொள்ளவில்லை எனவும் ஆனால், அது மிகவும் எளிது எனவும் குறிப்பிட்டுள்ளார்.சில சமயங்களில் தான் அழுது விடுவமுடன் மனமுடைந்து போயிருப்பதாகவும் புறிப்பிட்டுள்ள அவர் தன்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார். செரீனா அடுத்து யூ.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.