170
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இதுசுணோரி ஒனோஜெரா (Itsunori Onodera) எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் போது, எதிர்வரும் அவர் 20ம் திகதி இலங்கைக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love